

திருச்சி விமானநிலையத்தில் 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரைக்காலைசேர்ந்த அன்வர்தீன், தஞ்சாவூரைச் சேர்ந்த நஷூல் அகமது, அப்துல் வஹாப், பாஸ்கரன், மாயழகு ஆகியோரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பிடிபட்டது.
சிங்கப்பூரில் இருந்து நேற்று வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சோதனை நடத்தியபோது, புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 பேரிடமிருந்து ரூ.2.5 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்கம் பிடிபட்டது. பிடிபட்ட 10 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.