

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கரூர் கோட்ட செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் கோவை சாலையில் உள்ள துணைமின் நிலையத்தில் இருந்து நகர்ப் பகுதிக்குச் செல்லும் 11 கே.வி மின் பாதையில் உயர் அழுத்தஇன்சுலேட்டரில் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) மாலை அணில் புகுந்து அடிபட்டதால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதைஅடுத்து, மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அங்கு 3 இன்சுலேட்டர்கள் உடைந்து சேதமடைந்திருந்தது தெரியவந்தது. பின்னர், மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்து, இரண்டரை மணி நேரத்துக்குப் பின்பு இரவு 8 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.