கூடங்குளம் 1-வது உலையில் மின்உற்பத்தி நிறுத்தம் :

கூடங்குளம் 1-வது உலையில் மின்உற்பத்தி நிறுத்தம் :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள 2 அணு உலைகளில், 2-வது உலையில் தொழில்நுட்பக் கோளாறால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில், 2 நாட்களாக உற்பத்தி நடக்கிறது.

இந்நிலையில், முதலாவது உலையில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக நேற்று உற்பத்தி நிறுத்தப்பட்டது. 45 முதல் 60 நாட்கள் வரை நடைபெறும் பராமரிப்பு பணியின்போது, எரிகோல்கள் மாற்றப்பட்டு, புதிய எரிகோல்கள் பொருத்தப்படும். முதல் அணுஉலையில் இருந்து தமிழகத்துக்கு 465 மெகாவாட் மின்சாரம் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in