அமைச்சரை தவறாக வழிநடத்தும் அதிகாரிகள் :  ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

அமைச்சரை தவறாக வழிநடத்தும் அதிகாரிகள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

Published on

பாஜக முன்னாள் தேசியச் செயலர் ஹெச்.ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் தவறான தகவல்களை அளித்து வருகின்றனர். அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சிறந்த ஆன்மிகவாதி. ஆனால் அவரை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகின்றனர்.

சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர்நிலம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெறும் 9.58 ஏக்கர் நிலத்தை மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுவிட்டு, நிலம் முழுவதையும் மீட்டதுபோல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நான் ஆவணங்களை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக அறநிலையத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், கோயில் நிலங்களை மீட்க நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை அமல்படுத்தினாலே போதும்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் கலைஞர் கல்லூரி வளாகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதையும் அறநிலையத் துறை அமைச்சர் மீட்க வேண்டும்.

கடந்த 56 ஆண்டுகளாக இந்து கோயில்களை அழிக்கும் பணியைத்தான் தமிழக ஆட்சியாளர்கள் செய்து வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in