Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழப்பு :

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (60). இவர், சென்னையில் குடும்பத்துடன் வசித்தார். புதிதாக கட்டிவரும் வீட்டைப் பார்ப்பதற்காக, மனைவி மற்றும் திருமணமான 2 மகள்கள், 3 பேரக் குழந்தைகளுடன் வெற்றியூர் கிராமத்துக்கு ராமமூர்த்தி நேற்று காரில் வந்து கொண்டிருந்தார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சாத்தமங்கலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்,சாலையோர புளிய மரத்தில்மோதியது.

இதில் ராமமூர்த்தி மற்றும் அவரது 2 மகள்கள், 1 வயது குழந்தை உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஓட்டுநர், 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சைமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x