

தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 6,727, பெண்கள் 5,078 என மொத்தம் 11,805 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 1,563, ஈரோட்டில் 1,270, சென்னையில் 793 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 78,298 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 5 லட்சத்து 11,274 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 22 லட்சத்து 23,015 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் கோவையில் 2,754, சென்னையில் 1,777 பேர்உட்பட 23,207 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். கோவையில் 15,449, திருப்பூரில் 12,738, ஈரோட்டில் 10,589, சென்னையில் 7,464 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25,215பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 267 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 21 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில்கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,068 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 7,876 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 26,614, கோவையில் 2 லட்சத்து 5,6833, செங்கல்பட்டில் 1 லட்சத்து 52,257, திருவள்ளூரில் 1 லட்சத்து 8,369 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 273 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 3 கோடியே 3 லட்சத்து 9,255 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 70,961 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.