

ஈரோடு மாவட்டம், பவானி அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1படிக்கும் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி நேரில் சென்று விசாரித்தார்.
இதில், சிறுமிக்கு அவரது விருப்பமில்லாமல் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் சித்ரா மற்றும் மணமகன் கனகராஜ் (25) ஆகியோர் மீது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பவானி போலீஸில் புகார் தரப்பட்டது. குழந்தை திருமண தடைச் சட்டம், பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸார், சித்ரா, கனகராஜை கைது செய்தனர். சிறுமியின் விருப்பப்படி, அவரது தனது தந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.