

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், இரவு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சில இடங்களில் விடிய, விடிய மழைப்பொழிவு இருந்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 5.5 சென்டிமீட்டர் மழை பதிவானது.
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை அளவு (மி.மீட்டரில்):
கவுந்தப்பாடி 55, கொடிவேரி 32, பவானி, குண்டேரிப்பள்ளம் 23, அம்மாபேட்டை 21, கோபி, சத்தியமங்கலம் 19, ஈரோடு 15, வரட்டுப்பள்ளம் 7, பவானிசாகர் 6 மிமீ மழை பதிவானது.