Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

- வழிபாட்டு தலங்களில் சிறுமிகள் பிச்சை எடுப்பதை தடுக்க திட்டம் : முதல்கட்டமாக பழநியில் அடுத்த மாதம் முதல் அமல்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்த16 வயது சிறுமி பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டு பிரசவத்தின்போது இறந்தார். இச்சிறுமிக்கு பிறந்த குழந்தை திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம தத்தெடுப்பு மையத்தில் பராமரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணை யத்துக்குப் புகார் அளித்தார். இது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் வி.ராமராஜ், காந்தி கிராமத்தில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் குறித்து நேற்று காலை நேரில் ஆய்வு செய்தனர். இங்கு வளர்க்கப்படும் குழந்தைகள் மிக ஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்படுவதாகப் பாராட்டினர்.

இதையடுத்து சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போடி அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிரசவத்தின்போது இறந்துள்ளார். சிறுமி இறந்தது கூட்டு பாலியல் வன்முறை கிடையாது. காதல் பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை, இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப் பரிந்துரை செய்ய உள்ளோம்.

அனைத்து வழிபாட்டுத் தலங் களிலும் சிறுமிகள் பிச்சை எடுப்பதைத் தடுக்கவும், குழந்தைத் தொழிலில் ஈடுபடும் சிறுமிகளைப் பாதுகாக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

இத்திட்டத்தை முதல்கட்டமாக பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயில், கோவை மருதமலைமுருகன் கோயில், திருவண்ணா மலை அண்ணாமலையார் கோயில்,சிதம்பரம் நடராஜர் கோயில், திருத்தணி முருகன் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்ஹா ஆகிய தலங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பழநி கோயிலில் அடுத்தமாதமே இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. கோயில் நிர்வாகம்மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி இந்த திட்டம் அமல்படுத்தப்படும். பழநி கோயில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் ஒருங்கி ணைப்பாளராக ஆணையத்தின் உறுப்பினர் வி.ராமராஜ் செயல் படுவார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x