Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

இபிஎஸ்ஸுடன் அதிமுக நிர்வாகிகள் : சந்திப்பு :

சேலம்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி தங்கியுள்ளார். அவரை அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.

நேற்று 2-வது நாளாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வளர்மதி மற்றும் மேலூர் செல்வம், உசிலம்பட்டி ஐயப்பன், வேடச்சந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் உள்ளிட்டோர் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

வரும் 7-ம் தேதி அதிமுக பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் கூடி எதிர்க்கட்சிதலைவரை தேர்வு செய்யவுள்ளநிலையில், இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x