அதிக வாக்குகள் வித்தியாசம் : சொற்ப வித்தியாசம் :

அதிக வாக்குகள் வித்தியாசம் : சொற்ப வித்தியாசம் :

Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமானவித்தியாசத்தில் 25 பேர் வெற்றிபெற்றுள்ளனர். அதில் ஆத்தூர்திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவைவிட 1,35,571 வாக்குஅதிகம் பெற்று தமிழகத்திலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருவண்ணாமலை எ.வ.வேலு (திமுக) 94,673 வாக்குகள் வித்தியாசம், பூந்தமல்லி கிருஷ்ணசாமி (திமுக)94,110, எடப்பாடியில் பழனிசாமி(அதிமுக) 93,802, திருச்சி மேற்கில்கே.என்.நேரு (திமுக) 85,109, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் (திமுக) 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

1,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், மிகக்குறைந்த அளவாக தி.நகர் திமுக வேட்பாளர் கருணாநிதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனை விட 137 வாக்குகள் மட்டும் அதிகம்பெற்று வெற்றி பெற்றார். மொடக்குறிச்சி சரஸ்வதி (பாஜக) 281,தென்காசி பழனிநாடார் (காங்.) 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in