Published : 02 May 2021 03:13 am

Updated : 02 May 2021 03:13 am

 

Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் - 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து :

சென்னை

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. சென்னையில் 14 பள்ளிகள் உட்படதமிழகத்தில் 48 பள்ளிகள் உள்ளன. வரும் கல்வி ஆண்டில் 1-ம்வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இணையதளத்தில் (kvsonlineadmission.kvs.gov.in) கடந்த ஏப்ரல் 1-ம்தேதி தொடங்கியது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கே.வி. இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சேர்க்கை பட்டியல்,காத்திருப்பு பட்டியல் விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு முன்னுரிமை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x