பின்வாசல் வழியாக வியாபாரம் - கரூரில் ஜவுளிக்கடைக்கு சீல் :

பின்வாசல் வழியாக வியாபாரம் -  கரூரில் ஜவுளிக்கடைக்கு சீல் :
Updated on
1 min read

கரூரில் பின்வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து வியாபாரத்தில் ஈடுபட்ட ஜவுளிக்கடைக்கு நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் சீல் வைத்ததுடன், ரூ.15,000 அபராதம் விதித்தனர்.

கரோனா 2-ம் அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

மேலும், பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள், வியாபாரிகள் மீது சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள ஒரு ஜவுளிக்கடை நேற்று பின்வாசலை திறந்துவைத்து விற்பனையில் ஈடுபட்டுவருவதாக நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, அங்கு சென்ற சுகாதாரத்துறை அலுவலர்கள், அக்கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.15,000 அபராதம் விதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in