திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி - அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி : பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தை யொட்டி தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தை யொட்டி தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கடந்த 16-ம் தேதி மாலை தொடங்கியது.

உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகளால்திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி, கோயிலிலேயே நடைபெற்றது. பெரிய நந்தி அருகே சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்கதீர்த்தவாரி நடைபெற்றது.

முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மன் உற்சவம், கோயிலில் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. தீர்த்தவாரியைத் தொடர்ந்து கோயில் கொடி மரம் முன்பு மன்மத தகனம் நடந்தது.

கரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால், தீர்த்தவாரியில் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in