

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,499 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 216 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கோடை மழையால் நேற்று 1,499 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 97.54 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 97.55 அடியானது. நீர்இருப்பு 61.71 டிஎம்சி அளவில் உள்ளது.