

பெரம்பலூர் (தனி) தொகுதியின் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வரும் இம்மையத்தில் அரசியல் கட்சிகளின் முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் தனவேல் (46), அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பேசி, அங்கிருந்த இதர அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக முகவர்கள், பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தனவேல் வாக்குப்பதிவு இயந்திர அறை பாதுகாப்புப் பணியில் இருந்து நீக்கப்பட்டு மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.