சேலத்தில் முதல்வரை சந்தித்த அதிமுக நிர்வாகிகள் :

சேலத்தில் முதல்வரை சந்தித்த அதிமுக நிர்வாகிகள்  :
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. முன்னதாக மாநிலம் முழுவதும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கடந்த 4-ம் தேதி எடப்பாடியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். தேர்தல் நாளன்று எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையத்தில் முதல்வர் வாக்களித்தார்.

அதன்பின்னர், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் முதல்வர் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முன்தினம் சேலம் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அதிமுக ஒன்றிய,பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்டமுக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தனர். மேலும், 11 சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உதவிய வழக்கறிஞர்களும் முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது, தேர்தலில் பணிபுரிந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் முதல்வர் பாராட்டு தெரிவித்தார். மேலும், அனைவரும் கரோனா தொற்று தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். நேற்று முன்தினம் மாலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். இன்று (9-ம் தேதி) காலை சேலத்தில் இருந்து கார் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in