Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோர் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் நேற்று காலை 8.15 மணிஅளவில் தங்கள் வாக்குகளை பதிவுசெய்தனர். முன்னதாக ஸ்டாலின் உள்ளிட்டோர், மெரினா கடற்கரையில்உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர். பின்னர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

எங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக வாக்களித்து ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். தேர்தல்முடிவுகள் மே 2-ம் தேதி சிறப்பாகஇருக்கும் என்பது உறுதி. மக்கள் எழுச்சியுடன் வாக்களிப்பதை காணும்போது ஆளும்கட்சிக்கு எதிரான அலையை உணர முடிகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் எனக்கு அதிருப்தியும் இல்லை. திருப்தியும் இல்லை. ஆளும் கட்சியினர் தோல்வி பயத்தால் முக்கிய தொகுதிகளில் எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை. பணப் பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x