

தஞ்சாவூரில் புதுக்குடி சோதனைச் சாவடியில் வணிகவரித் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த கூரியர் பார்சல் கொண்டு வரும் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 640 குக்கர்கள் இருந்தன.
இந்த குக்கர்கள் திருச்சியில் இருந்து திருவையாறில் உள்ள ஒரு பேக்கரிக்கு கொண்டுசெல்லப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பேக்கரிக்கு ஏன் இவ்வளவு குக்கர்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்ற கேள்விக்கு வாகனங்களில் வந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, ரூ.2.68 லட்சம் மதிப்புடைய குக்கர்களுடன், வேனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.