Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
வடக்கு கேரளா முதல் வடக்குமகாராஷ்டிரா வரை காற்று சுழற்சி நிலவி வருகிறது. அதன்காரணமாக 13, 14-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 15, 16-ம் தேதிகளில் தென் தமிழகமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கெட்டி, குன்னூரில் 5 செமீ,தென்காசி, வால்பாறை, உதகமண்டலத்தில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT