Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

5-ம் கட்ட பிரச்சாரம் பிப். 26-ல் ஸ்டாலின் தொடக்கம்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரத்தின் 5-ம் கட்ட பயணத்தை வரும் 26-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சாரத்தின் 5-வது கட்ட பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்குகிறார். பிப்ரவரி 26-ம் தேதி காலை 8 மணிக்கு விழுப்புரம், ஜீவனூர் நான்கு முனை கூட்டுச்சாலை, மதியம் 1 மணிக்கு மதுராந்தகம், 27-ம்தேதி காலை 8 மணிக்குதாம்பரம், படப்பை கரசங்கால், மதியம் 1 மணிக்கு மாதவரம், 28-ம் தேதி மதியம் 1 மணிக்கு கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. திடல்ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரப் பயணத்தை கடந்த ஜனவரி 29-ம் தேதி ஸ்டாலின் தொடங்கினார். தொகுதி வாரியாக மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் அவர், அதற்கு திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் 100 நாள்களில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x