

முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
பகல் 11 மணிக்கு வைகுண்டம் மற்றும் 12 மணிக்கு திருச்செந்தூரில் பிரச்சாரம், பகல் 1 மணிக்கு ஓட்டப்பிடாரத்தில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம், மாலை 6 மணிக்கு தூத்துக்குடி பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை 143 கி.மீ. தொலைவுக்கு ரூ.700 கோடி செலவில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சென்னை மணலியில் கேசோலைன் கந்தகம் அகற்றும் யூனிட் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
நிறைவடைந்த இந்த 2 திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம்இன்று (பிப்.17) மாலை 4.30மணியளவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நாகப்பட்டினத்தில் காவிரிப்படுகையில் ரூ.31,500 கோடி மதிப்பீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
விழாவில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பங்கேற்கிறார்.