

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்தவர் ஆண்டனி வினோத் (34). ஏற்கெனவே திருமணமான இவர், 2017-ம் ஆண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவியை திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கர்ப்பமான மாணவிக்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளைக் கொடுத்து கருக்க்கலைப்பு செய்துள்ளார். இவ்வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று ஆண்டனி வினோத்துக்கு 44 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அருணாசலம் தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞராக ஆஜரான மாலினி பிரபாகர் கூறும்போது ‘‘போக்ஸோ சட்டத்தில் இதுதான் அதிகபட்ச தண்டனை. வேறு எங்கும் இத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை’’ என்றார்.