

தமிழக காங்கிரஸ் பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, கே.வீ.தங்கபாலு மகன் கார்த்திக் தங்கபாலு உள்ளிட்டோருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
காங்கிரஸ் கமிட்டி தலைவர்சோனியாகாந்தி ஒப்புதலோடும், ராகுல்காந்தியின் வாழ்த்துகளோடும், தமிழக பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் பரிந்துரையின்படியும் தமிழக மாநில நிர்வாகிகள், மாவட்டதலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்:
தமிழக காங்கிரஸ் பொருளாளராக டாக்டர் ரூபி.ஆர்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக உ.பலராமன், கோபண்ணா, நாசே ராமச்சந்திரன், ஆர்.தாமோதரன், ஏபிசிவி சண்முகம், டி.என்.முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, கே.ஐ.மணிரத்தினம், கே.விஜயன், பி.தீர்த்தராமன், வாலாஜா அசேன்,ஜி.ராஜேந்திரன், எம்.என்.கந்தசாமி, செந்தமிழ் அரசு, எஸ்.சுஜாதா,அழகு ஜெயபால், ராபர்ட் புரூஸ், ராஜா தம்பி, டி.எல்.சதாசிவ லிங்கம், இமயா கக்கன், கீழானூர் ராஜேந்திரன், சாமுவேல் ஜார்ஜ், கே.செந்தில்குமார், டாக்டர் சுப சோமு, இராம.சுகந்தன், டாக்டர் ஆர்.செழியன், ரங்கபூபதி, ஏகாட்டூர் ஆனந்தன், குலாம் மொய்தீன், எஸ்.எம்.இதாயத்துல்லா, சொர்ணா சேதுராமன், முத்துக்குமார் ஆகிய 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்
மறைந்த எம்.பி. வசந்தகுமாரின்மகன் விஜய் வசந்த், முன்னாள்தலைவர்கள் சு.திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, கே.வீ.தங்கபாலு மகன் கார்த்திக் தங்கபாலு உள்ளிட்ட 57 பேர் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுஉள்ளனர். இதுதவிர, மாவட்டத் தலைவர்கள், 104 செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் கருத்து