சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தேரோட்டம் ‘சிவ சிவ’ முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்

பக்தர்கள் புடை சூழ சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
பக்தர்கள் புடை சூழ சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏரானமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை கோயிலில இருந்து வழக்கத்தை விட தாமதாமாக நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஷ்வரர் தேரில் எழுந்தருளினர்.

பின்னர் கீழவீதி நிலையில் இருந்து பக்தர்கள் வடம் பிடிக்க 5 தேர்களும் புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதிகள் வழியாக சென்றது. ஒவ்வொரு வீதிகளிலும் மண்டகபடி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

மேலவீதியும், வடக்கு வீதியும் இணையும் இடத்தில் பருவதராஜ குலத்தினர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சுவாமிகளுக்கு பட்டு சாத்தி படையல் செய்தனர். ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு தேர்கள் நிலைக்கு வந்தன.

இதனை தொடர்ந்து கோயில் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் லட்சார்சணை நடைபெற்றது.

இன்று ஆருத்ரா தரிசனம்

தொடர்ந்து காலை 10 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள் பகுதி திருவாபரண அலங்காரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் பகதர்களுக்கு காட்சி அளிப்பார்கள். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா முடிந்து தீர்த்தவாரி நடந்தவுடன் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in