பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் உடல் தகனம் அமைச்சர், ஆட்சியர் உட்பட ஏராளமானோர் அஞ்சலி
திருநெல்வேலியில், உடல்நலக் குறைவால் காலமான பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் உடலுக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு உட்பட ஏராளமானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக் குறைவால் காலமான பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர் உட்பட ஏராளமானோர் நேற்று அஞ்சலிசெலுத்தினர். மாலையில் திருநெல்வேலி வெள்ளக்கோவிலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.