

இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் பெருமாள்பாண்டியனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், நமச்சிவாயத்துக்கு 2 மாதம் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வடிவேலு தீர்ப்பளித்தார்.சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆய்வாளர் பெருமாள்பாண்டியன் பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.