

மதுரை விமான நிலையத்துக்கு நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வந்தபோது, அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சினேகனின் செல்போன், பணத்தை ஒருவர் திருடினார். அந்த நபர் மற்றொருவரிடமும் திருட முயன்றபோது அருகே இருந்த கட்சியினர் அவரை பிடித்து பெருங்குடி போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கமலின் சொந்த ஊரான பரமக்குடியைச் சேர்ந்த பாண்டி மகன் முனியசாமி(23) என்பது தெரியவந்தது. அவருடன் வந்த மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.