

மழையால் வீடுகள் பகுதிச் சேதமடைந்த 59 பேருக்கு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிவர், புரெவி புயல் பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவிடம் முதல்வர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் பயிர் சேதாரம் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும். 5 புயல்கள் வருவதாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மத்திய பேரிடர் நிதியை எதிர்பார்க்காமல் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.