தேவேந்திர குலவேளாளர் என அழைக்கும் வகையில் 7 சாதிகளை இணைக்க மத்திய அரசிடம் பரிந்துரை சிவகங்கையில் முதல்வர் பழனிசாமி தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான ஆணை பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள் சின்னநம்பி மற்றும் அமிர்தம் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
7 சாதிகளை இணைத்து தேவேந்திர குலவேளாளர் என ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.