

தஞ்சாவூர் அருகே உள்ள பள்ளியக்ரஹாரம் அகிலாம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம்(78). லாரி கிளீனர். இவரது மனைவிமின்னல்கொடி(68). இவர்களின் மகன் ரமேஷ் 2005-ல் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தார். திருமணமான 2 மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
பள்ளியக்ரஹாரம் அகிலாம்பேட்டையில் செல்வமும், மின்னல்கொடியும் வசித்து வந்தனர்.செல்வம் சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை மின்னல்கொடி கணவரை எழுப்ப முயன்றபோது, அவர் இறந்துவிட்டதை அறிந்தார். அதிர்ச்சியில்மயங்கி விழுந்த மின்னல்கொடியும் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடம்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.