

கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கரோனா ஒழிப்பு ஆய்வுப் பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்குகிறார்.
முதல்வர் பழனிசாமி இன்று (நவ.10) காலை 10.15 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு, அதிமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, நாகர்கோவில் செல்லும் முதல்வர், அங்கு இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இரவில் அங்கு தங்கும் முதல்வர், நாளை (நவ.11) காலையில் மீண்டும் தூத்துக்குடி வருகிறார். காலை 9 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கதிரியக்க கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும், ஆய்வுiக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதன்பின், மதியம் 3 மணிக்கு விருதுநகரில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.