Published : 21 Apr 2024 04:23 AM
Last Updated : 21 Apr 2024 04:23 AM
மதுரை: நெல்லை தியாகராஜ நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மகன் ஆகாஷ் கிருஷ்ணன், ‘மாடர்ன் பென்டத்லான்’ என்ற விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வானார். தேசிய போட்டிக்கான பட்டியலை, தமிழக உடற்கல்வி தலைமை அலுவலர் ஏப்.22-ம் தேதிக்கு முன்பு அனுப்ப வேண்டும். ஆனால், பட்டியல் அனுப்பப்படவில்லை.
எனவே, மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடைபெறும் 67-வது தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை தயார் செய்து, இணையத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மாடர்ன் பென்டத்லான் விளையாட்டு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, பென்டத்லான் விளையாட்டு அங்கீகரிக்கப்படாதபோது, மனுதாரரின் மகனைஎவ்வாறு அதில் பங்கேற்க அனுமதிப்பது? வேறு வழிகளில் மனுதாரரின் மகனை பங்கேற்கச் செய்யவாய்ப்புள்ளதா என்பது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இணைஇயக்குநர் பதில் அளிக்க வேண்டும். விசாரணை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT