Last Updated : 09 Mar, 2021 03:12 AM

 

Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

பிப்

பிப்.26: மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்பட்டுவந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

பிப்.27: திருவள்ளூர் பல்கலைக் கழகத்தின் ஆளுகையிலிருந்து பிரிக்கப்பட்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் திறக்கப்பட்டது.

பிப்.28: பிரேசிலின் அமேசானியா உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் ஹரிகோட்டா சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. 51 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது.

மார்ச் 2: தமிழக பசுமை இயக்கத் தலைவரும் சூழலியல் செயற்பாட்டளருமான ஈரோட்டைச் சேர்ந்த டாக்டர் வெ. ஜீவானந்தம் காலமானார். மார்க்சியம், காந்தியம் சார்ந்து இயங்கிவந்த அவர் தமிழகத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர்.

மார்ச் 4: ஆண்டிகுவாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரண் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய மூன்றாவது வீரரானார்.

மார்ச் 5: மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில் மக்கள் வாழ எளிதான நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடத்தைப் பிடித்தது. முதலிடத்தை பெங்களூரு பிடித்தது.

மார்ச் 5: ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது எனவும் இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x