Special
திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் கருத்தரங்கு :
திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் மகாத்மாவின் மகத்துவங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது.
கல்லூரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் சுஜாதா, இணைப் பேராசிரியர் சாந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிப் பேராசிரியர் மாசிலாதேவி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் கவிதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் நாகநந்தினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று காந்தியின் சத்யாகிரகம், அகிம்சை, மதநல்லிணக்கம், தீண்டாமை குறித்து பேசினார்.
கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் சவீதா நன்றி கூறினார். தமிழ்த் துறையினர், மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
