

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டாரத்தில் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோருக்கு ஒரு ஹெக்டே ரில் நிலம் இருக்க வேண்டும். ரூ.90 ஆயிரம் மதிப்பில் ஒருங் கிணைந்த பண்ணையம் உரு வாக்க வேண்டும். அதில் பயிர் செயல்விளக்கத் திடல், தீவனப் பயிர் சாகுபடி, மரக்கன்றுகள், ஒரு கறவை பசு, 10 ஆடுகள், 15 கோழிகள், பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புப் பெட்டிகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னேற்பு மானியமாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படும். புலியடிதம்பம், அல்லூர், காளையார்மங்களம், அதப் படக்கி, மாரந்தை, சேதாம்பல், வேளாரேந்தல், இலந்தகரை, சிலுக்கபட்டி ஆகிய ‘கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட’ கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விருப்பமுள்ளோர் காளையார்கோவில் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என உதவி இயக்குநர் செந்தில்நாதன் தெரி வித்தார்.