வயலுக்கு இயற்கை உரம் கிடைக்கும் - வெளி மாவட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு வந்துள்ளன : கடலூர் மாவட்டத்துக்கு

சேத்தியாத்தோப்பு பகுதியில் மேய்ச்சலுக்கு வந்துள்ள வெளி மாவட்ட மாடுகள்.
சேத்தியாத்தோப்பு பகுதியில் மேய்ச்சலுக்கு வந்துள்ள வெளி மாவட்ட மாடுகள்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்துக்கு வெளி மாவட்டத்து கால்நடைகள் மேய்ச் சலுக்கு வந்துள்ளன.

கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு, கம்மாபுரம், புவனகிரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்காக வந்துள்ளன. இப்படி வரும் கால்நடைகள் விவசாய வயல்களில் மேய்ச்சலுக்காக விடப்பட்டு அதே வயலில் கிடை கட்டப்படும். இதன் மூலம் வயல்களுக்கு மாட்டு சாணம், ஆட்டு புழுக்கை போன்ற இயற்கை உரம் கிடைக்கும். அந்தந்த விவசாயிகள், கிடை கட்டிட சிறிய தொகையை அதனை மேய்ப்பவர்களிடம் தந்துவிடுவர்.

தற்போது கடலூர் மாவட்டத்தில் இப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் குறுவை நடவு பணிகளை மேற்கொள் வதற்காக ஆயத்தப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வயல்களில் கோடை உழவு மேற் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த வயலில் கிடை கட்டுவதால் கிடைக்கும் இயற்கை உரங்கள் நிலத்தை வளப்படுத்திடும். பூச்சி தாக்குதலை குறைத்திடும். இதனால் வெளிமாவட்டத்திலிருந்து மாடுகள், ஆடுகள் அதிகளவில் வந்துள்ளது இப்பகுதி விசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சேத்தியாத்தோப்பு பகுதி விவசாயிகள் கூறுகையில், "மாடுகள் வயல்களில் மேய்ந்து அங்கேயே கிடை அமைப்பதால் அவற்றின் கழிவுகள் இயற்கை உரமாகி பயிர் சாகுபடி நன்றாக இருக்கும்.அதிக மகசூலும் கிடைக்கும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in