தீ தொண்டு வாரவிழா :

தீ தொண்டு வாரவிழா  :
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வாரவிழா நடைபெற்று வருகிறது. தீ தொடர்பான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள், அரசு ஊழியர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். ஆத்தூர் தீயணைப்புதுறை சார்பில் நிலைய அலுவலர் மோகன் தலைமையில் சின்னாளபட்டி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

தீ விபத்துக்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் தீ தடுப்பு குறித்து அறிந்து கொண்டனர்.

நத்தம் அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு குறித்து செயல் விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை வளாகத்தில் திடீர் என தீ பரவினால் தடுக்கும் முறைகள், மாடியில் இருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டு வருதல் ஆகியவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருக்கோல்நாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு சாதனங்களை பயன்பத்தி தீயை அணைப்பது குறித்தும் விளக்கமளித்தனர். செய் முறை விளக்கமும் செய்து காணப்பிக் கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in