ராமலிங்க விலாசம் அரண்மனை, அரசு அருங்காட்சியகம் மூடல் :

ராமலிங்க விலாசம் அரண்மனை, அரசு அருங்காட்சியகம் மூடல் :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அருங்காட்சியகம், ராமலிங்க விலாசம் அரண்மனை மூடப்பட்டது.

அருங்காட்சியகங்களை மே 15-ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை ஏப்ரல் 16-ம் தேதி முதல் மூடப்பட்டது.

ராமலிங்க விலாசத்தில் பழங்கால ஓவியங்கள், அணிகலன்கள்,வாள், வேல், துப்பாக்கிகள், ஆட்சிபுரிந்த இடம் என அரிய பொருள்கள், தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் வெளியூர், வெளி மாநிலச் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டவர் விரும்பி வந்து செல்லும் இடமாக ராமலிங்க விலாசம் அரண்மனை உள்ளது.

ராமலிங்க விலாசம் மூடப்பட்டி ருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கேணிக்கரை அருங்காட்சியகமும் 16-ம் தேதி முதல் மூடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in