தேனியில் 2 வாரத்துக்குள் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தல் :

தேனியில் 2 வாரத்துக்குள் தடுப்பூசி போட்டு கொள்ள  அறிவுறுத்தல் :
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தலைமை வகித்துப் பேசியதாவது: தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து கை சுத்திகரிப்பான் உபயோகப் படுத்துவதைக் கட்டாயப்படுத்த வேண்டும். மேலும் முகக்கவசம் அணிந்து வருவதையும் உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்துவதுடன் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்களின் வீடுகளில் சென்று கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும்.

அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வாரத்துக்குள் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in