Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

மொபைல் பழுது நீக்கும் பயிற்சி :

தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்புப்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு ஏப்.19-ம் தேதி முதல் மொபைல் பழுதுநீக்க இலவசப் பயிற்சி தொடங்க உள்ளது. காலை 9.30 முதல் மாலை 5.30 மணிவரை 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

19 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற நபர்கள் விண்ணப்பிக்கலாம். உணவும் இலவசம். தொழில் தொடங்க வங்கிக்கடன் ஆலோசனையும் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9442758363 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று இயக்குநர் தனசேகரபெருமாள் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x