தேர்தல் பணியின்போது - விபத்தில் காயமடைந்த காவலருக்கு சக ஊழியர்கள் நிவாரண உதவி :

தேர்தல் பணியின்போது  -  விபத்தில் காயமடைந்த காவலருக்கு சக ஊழியர்கள் நிவாரண உதவி :
Updated on
1 min read

சிவகங்கை அருகே தேர்தல் பணியின்போது விபத்தில் காயமடைந்த காவலருக்கு சக ஊழியர்கள் நிவாரண உதவியாக ரூ.1,27,500-ஐ வழங்கினர்.

சிவகங்கை அருகே ஊத்திகுளத்தில் இளையான்குடி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சில நாட்களுக்கு முன் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் சிறப்பு எஸ்.ஐ. கர்ணன், ஆயுதப்படை காவலர் பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்த திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்த காவலர் சந்தனகுமார், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து சக ஊழியர்கள், காவல்துறை உதவும் கரங்கள் நண்பர்கள் இணைந்து வாட்ஸ் ஆப் குழு மூலம் நிதி திரட்டினர். அதில் சேகரித்த ரூ.1,27,500-ஐ சந்தனகுமார் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in