Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM

திண்டுக்கல்லில் - அமமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் :

திண்டுக்கல் நாகல் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட அமமுக வேட்பாளர் ராமுத்தேவர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதி அமமுக வேட்பாளர் திண்டுக்கல் நகர்பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் தொகுதி அமமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் ராமுத்தேவர். இவர், நேற்று திண்டுக்கல் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட நாகல் நகர், சந்தைப்பேட்டை ரோடு, அப்பியா சந்து, ஆசாரி சந்து உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். பொது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்களிக்கக் கேட்டுக்கொண்டார். பல்வேறு சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தில் தேமுதிக மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், அமமுக மாநிலப் பேச்சாளர் பொன்அண்ணாதுரை, அமமுக மாவட்ட அவைத் தலைவர் சவரிமுத்து, 36-வது வார்டு செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x