கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் :

கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் :
Updated on
1 min read

திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரி, திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது.

திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக் கல்லூரி முதல்வர் பால குருசாமி, ஒருங்கிணைப்பாளர் மேரிஜோஸ்பின் இஷபெல்லா ஆகியோர் முன்னிலையில், கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முத்துலட்சுமி, திண்டுக்கல் இலக்கிய களம் செயலாளர் ராமமூர்த்தி, துணை செயலாளர் மனோகரன், பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலக்கிய கள நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்கவும், தமிழ் இலக்கியம் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகள், விவாதங்களில் மாணவர்கள் பங்கேற்கவும் வாய்ப்பாக அமையும். இலக்கியகளம் நடத்தும் புத்தக கண்காட்சிகள், பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், போட்டிகளில் ஆகியவற்றில் தங்களை இணைத்துக் கொள்வதோடு, மாணவர்களின் ஆளுமை திறனையும் உயர்த்த வாய்ப்பாக அமையும், என்றனர். தமிழ்த்துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in