

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்யும் பொருட்டு இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி பெரியகுளம் (தனி), போடி தொகுதிகளுக்கு ரவீந்தர் என்ற பார்வையாளரும், ஆண்டிபட்டி, கம்பம் தொகுதிகளுக்கு பிரபு டட்டா டேவிட் பிரதான் என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை ஆய்வு செய்யவும், பாதுகாப்பு வழங்கவும் காவல் பார்வையாளராக டாவாஷெர்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.