சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர்பணியிடை நீக்கம் :

சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர்பணியிடை நீக்கம் :
Updated on
1 min read

பல்வேறு புகார்கள் அடிப்படையில் சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் இருந்து மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, கோயில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தீயணைப்பு நிலைய வாகனம் அனுப்பப்பட்டு வருகிறது.

அதற்காக வாகனக் கட்டணம், கி.மீ.க்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. மேலும் இதற்கான ரசீது தீயணைப்பு நிலையத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த ரசீதில் முறைகேடு செய்து பணத்தைக் கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தீயணைப்புத் துறை தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in