பங்குனி திருவிழாவையொட்டி பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம். (வலது) சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முத்தால பரமேஸ்வரி அம்மன்.
பங்குனி திருவிழாவையொட்டி பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம். (வலது) சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முத்தால பரமேஸ்வரி அம்மன்.

சிவகங்கை தொகுதியில் 6 மனுக்கள் நிராகரிப்பு: 20 பேரின் மனுக்கள் ஏற்பு :

Published on

சிவகங்கையில் வேட்புமனுத் தாக்கல் செய்த 26 மனுக்களில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர். செந்தில்நாதன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் குணசேகரன், அமமுக சார்பில் அன்பரசன், நாம் தமிழர் கட்சி சார்பில் மல்லிகா, மக்கள் நீதி மய்யம் (சமத்துவ மக்கள் கட்சி) சார்பில் ஜோசப் உட்பட 26 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 20 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in