தேனியில் ராட்சத பலூன் மூலம்  தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் :

தேனியில் ராட்சத பலூன் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் :

Published on

நூறு சதவீத வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பேரணி, கோலம், குறும்படம் ஒளிபரப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தேனி காமராஜர் பேருந்து நிலையம் அருகே 50 அடி விட்டம், 15 அடி உயரம் கொண்ட ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. இதில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் முடியும் வரை இந்த பலூன் வானில் பறக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in