திண்டுக்கல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி :

திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட இளையோர் நல அலுவலர் ரோஸ்மேரிபாத்திமா.
திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட இளையோர் நல அலுவலர் ரோஸ்மேரிபாத்திமா.
Updated on
1 min read

நேருயுவகேந்திரா, நெட்டியபட்டி இளைஞர் சங்கம், புனித அந்தோணியார் பெண்கள் கலை கல்லூரி சார்பில் இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மேரிபிரமிளாசாந்தி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட இளையோர் நல அலுவலர் ரோஸ்மேரிபாத்திமா, இந்திய செஞ்சிலுவை சங்க துணைத் தலைவர் சேக்தாவூது ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசினர். தேர்தலில் வாக்களிக்கும் முறை, ஜாதி, மதம் பார்த்து வாக்களிக்கக் கூடாது.

இலவச பொருட்கள், பணத்திற்காக வாக்களிக்கக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேர்தல் குறித்த விழிப்புணர்வு வினாடி, வினா போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் பாண்டிமீனா நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in