திருப்பத்தூரில் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு வரவேற்பு :

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதியில் 4-வது முறையாக திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் போட்டியிடுகிறார். நேற்று சென்னையில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூர் அருகே எஸ்.வேலங்குடிக்கு வந்த அவர், அங்குள்ள சாம்பிராணி கருப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து அவருக்கு கீழச்சிவல்பட்டி அருகே பில்லமங்கலம் என்ற இடத் தில் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுகூடல்பட்டி, நெடுமறம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அவருக்கு வர வேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு திருப்பத்தூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து திறந்தவேனில் வாக்குச் சேகரித்தார். தொடர்ந்து மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in